states

img

நாரதா டேப் வழக்கு... மம்தா அரசின் 2 அமைச்சர்கள், எம்எல்ஏ உள்பட 4 பேர் கைது....

கொல்கத்தா:
நாரதா டேப் வெளியான வழக்கில் மேற்கு வங்கப் போக்குவரத்து மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன்மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் திங்களன்று கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள நாரதா இணையதளம் 2016ஆம் ஆண்டு ஒரு ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்கு பணம் பெற்றது தொடர்பான காட்சியை நாரதா நிறுவனம் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளிக்கொண்டு வந்தது.இந்த நாரதா வீடியோ டேப் விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் நடந்தபோது அமைச்சர்களாக இருந்த திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பிர்ஹத் ஹக்கீம், சுப்ரஜா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சாட்டர்ஜி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த 4 பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க மே.வங்க ஆளுநர் தனகரிடம் சிபிஐ அனுமதி கோரியிருந்தது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில் திங்களன்று சிபிஐ அதிகாரிகள் குழுவினர், அமைச்சர் ஹக்கிம் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் என 4 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.'

;